இன்றைய தினம்: 05-May-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-05-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 23 ம் நாள்,

2026, மே 05 ம் நாள், செவ்வாய்


சூரிய உதயம்: காலை 05:57 AM


இன்றைய நட்சத்திரம்: பகல் 12:03 PM வரை கேட்டை பின்பு மூலம்

சந்திராஷ்டமம்: கார்த்திகை ரோகிணி

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மாலை 03.00 - 04.30 வரை

எமகண்டம்:
காலை 09.00 - 10.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தவும். உறவினர்களின் அன்பு மனதில் நெகிழ்ச்சியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,சவால்கள், விவாதங்களில் ஜெயிக்க முடியும். பழைய சுவையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புது நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாம் மேன்மையடையும்.

மிதுன ராசி அன்பர்களே,சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். பெரியோர்கள் ஆலோசனை வழங்குவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி அன்பர்களே, எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. தியானம் மன அமைதியை தரும். பணம் சேமிக்க முடியாத சூழல் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்ம ராசி நேயர்களே,பேச்சில் நிதானமும், விவேகமும் அதிகம் தேவை. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி நேயர்களே, பொருளாதாரப் சிக்கல்கள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து அனுகூலமான தகவல் வரும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்க வேண்டாம். கடன் நெருக்கடிகள் குறையும். உத்யோகத்தில் வேலைச் சுமை இருக்கும்.

மகர ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். முக்கிய விசேஷங்களை முன்னின்று நடத்த முடியும். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை. பல நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


இன்றைய சிறப்பு:

சங்கடஹர சதுர்த்தி ...

சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE