பராபவ வருடம், சித்திரை மாதம் 26 ம் நாள்,
2026, மே 08 ம் நாள், வெள்ளி
சூரிய உதயம்: காலை 05:55 AM
இன்றைய நட்சத்திரம்: மாலை 06:36 PM வரை உத்திராடம் பின்பு திருவோணம்
சந்திராஷ்டமம்: திருவாதிரை புனர்பூசம்
சூலம்: மேற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
09:30 - 10:30 வரை
மாலை:
04:30 - 05:30 வரை
இராகு காலம்:
மதியம் 10.30 - 12.00 வரை
எமகண்டம்:
மாலை 03.00 - 04.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே, கடினமான காரியங்களையும் எளிதாக முடிக்க முடியும். நண்பர்கள் சரியான நேரத்தில் உதவி செய்வர். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் திட்டமிட்ட வேலைகள் முடிவடையும். பணத்தேவைகள் அதிகரிக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, குடும்ப நலனில் கவனம் தேவை. எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்ம ராசி நேயர்களே, மனதில் எழும் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
கன்னி ராசி நேயர்களே, புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். உடல் உபாதைகள் நீங்கும். எதையும் தீர ஆலோசிக்காமல் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டு யோகம் உண்டு. உறவினர்களின் ஆதரவு உற்சாகம் தரும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
தனுசு ராசி நேயர்களே, எடுத்த வேலைகளில் இழுபறி நிலை நீடிக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வர். பண வரவில் ஏற்ற தாழ்வு இருக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
கும்ப ராசி நேயர்களே,மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களால் அனுகூலங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மீன ராசி நேயர்களே, விருப்பமானவர்களுடன் மனம் விட்டு பேசவும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி எதிர்பார்த்து வருவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்...
ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!