இன்றைய தினம்: 11-May-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-11-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 28 ம் நாள்,

2026, மே 11 ம் நாள், திங்கள்


சூரிய உதயம்: காலை 05:54 AM


இன்றைய நட்சத்திரம்: இரவு 09:28 PM வரை சதயம் பின்பு பூரட்டாதி

சந்திராஷ்டமம்: ஆயில்யம் மகம்

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
காலை 07.30 - 09.00 வரை

எமகண்டம்:
மதியம் 10.30 - 12.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே, மனதில் நினைத்த காரியம் நடக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி அன்பர்களே, வெளிநபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தூரத்து உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எதிரிகள் கூட ஒதுங்கியே நிற்பர். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, பொருளாதார நிலை சீராகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக நடந்துகொள்ளவும். திருமண காரியம் கைகூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி நேயர்களே, சவால்களை வெல்லும் திறன் அதிகரிக்கும். விருப்பங்கள் நாளடைவில் பூர்த்தியாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் நிறைய செலவுகள் வரும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்பட்டு நீங்கும்.

தனுசு ராசி நேயர்களே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலும். அடிக்கடி மறதி தொல்லை வரும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். புது தொழில் யோகம் அமையும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகளை கவனிக்க வேண்டிவரும். மன சோர்வு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே, ஒதுங்கி நின்றவர்கள் மீண்டும் விரும்பி வருவர். திட்டமிட்ட காரியம் ஒன்று தாமதமாக நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, மனதில் பல நல்ல எண்ணங்கள் உதிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.


இன்றைய சிறப்பு:

நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE