விருச்சிகம்: பிப்ரவரி மாத ராசி பலன் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிக ராசி அன்பர்களே...
எடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. ராசியில் இருக்கும் வக்ர சனியால் மன நிம்மதி குறைந்து வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். அதை அனைத்தையும் உங்கள் திறமையால் கவனமாக கையாளுவீர்கள். அதே வேளையில் ராசிநாதனின் சஞ்சாரத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும், எதிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து செய்வது நல்லது.
தொழில் ஸ்தானாதிபதி சூரியன் அவரது ஸ்தானத்தை அவரே பார்ப்பதால் கூடுதல் யோகம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலாக தோன்றினாலும் கடைசியில் சிறந்த அனுகூலத்தையே தரும். பண விரயமும் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் தொல்லைகள் தீரும். உடல் களைப்பும், சோர்வும் உங்களை அண்டாமல் கவனமாக இருப்பது நல்லது.
பெண்கள் முக்கிய காரியத்தில் ஈடுபடும் போது யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல், செலவு கூடும்.
கலைத் துறையினருக்கு கஷ்டங்கள் குறையும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க கூடுதல் வருமானம் இருக்கும்.
அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். கவனம் தேவை.
புதிய முயற்சிகளை தள்ளி போடுவது, வெற்றியை பாதிக்கும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். பணவரத்து கூடி , எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். அத்துடன் படிப்பில் கூடுதல் கவனம் முன்னேற்றத்துக்கு உதவும்.
பரிகாரம்: முருகன் வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....
Tags:
#விருச்சிகம் ராசி பலன்கள் #மாத ராசி பலன் #பிப்ரவரி மாத பலன்கள் #கேட்டை #அனுஷம்