பராபவ வருடம், சித்திரை மாதம் 31 ம் நாள்,
2026, மே 14 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 05:54 AM
இன்றைய நட்சத்திரம்: இரவு 08:06 PM வரை ரேவதி பின்பு அஸ்வினி
சந்திராஷ்டமம்: உத்திரம் அஸ்தம்
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30 வரை
மாலை:
12:30 - 01:30 வரை
இராகு காலம்:
மதியம் 01.30 - 03.00 வரை
எமகண்டம்:
காலை 06.00 - 07.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டிவரும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். எதிரிகள் விலகி நிற்பர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே, அசதியும், மன சோர்வும் அவ்வப்போது வந்து போகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
மிதுன ராசி அன்பர்களே,தெய்வ வழிபாடுகளால் மனநிம்மதி கிடைக்கும். சுற்றி உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடக ராசி அன்பர்களே, குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும். உடல் நலம் மேம்படும். நண்பர்கள் அவசர நேரங்களில் கை கொடுப்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்ம ராசி நேயர்களே, வெளிவட்டாரத் பழக்கங்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் வீண் விவாதம் செய்ய வேண்டாம். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கன்னி ராசி நேயர்களே, குடும்ப எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். கோபதாபங்களை குறைத்துக்கொள்ளவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
துலாம் ராசி நேயர்களே, எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தர வேண்டாம். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சேமிக்க பழகிக்கொள்ளவும். புது தொழில் யோகம் அமையும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப பொருளாதாரம் சீராக இருக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகர ராசி நேயர்களே, பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோர்கள் எப்போதும் துணை நிற்பர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
கும்ப ராசி நேயர்களே, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீன ராசி நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வெளியிடங்களில் உங்கள் மதிப்பு உயரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்...
பிரதோஷம்...
கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!