தனுசு: பிப்ரவரி மாத ராசி பலன் (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

feb-2025-monthly-horoscope-of-dhanusu-rasi-sagittarius
Spiritual

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தனுசு ராசி அன்பர்களே...

ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்ட உங்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி, பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக கிடைக்கலாம்.

தொழில் வியாபாரம் சிறக்கும். புதிய பல ஆர்டர்கள் வரும், அதிக உழைப்பு தேவை. அரசாங்க காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

பலவகை யோகம் உண்டாகும். குடும்பத்தில் இயல்பு சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப நிகழ்ச்சிகளில் உறவினர்களுடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் விருப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புதிய வீடு கட்டுவது அல்லது பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முயற்சி செய்வீர்கள். யாசகம் கேட்பவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் அனுகூலம் தரும்.

அரசியல் துறையினருக்கு வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக் கொள்வீர்கள். புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலிடத்தின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

மாணவர்கள் புத்திசாதூரியத்துடன் செயல்பட்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவார். கல்வியில் மேன்மை உண்டாகும்

பரிகாரம்: குரு வழிபாடு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

SCROLL TO NEXT ARTICLE