பராபவ வருடம், வைகாசி மாதம் 11 ம் நாள்,
2026, மே 25 ம் நாள், திங்கள்
சூரிய உதயம்: காலை 05:52 AM
இன்றைய நட்சத்திரம்: காலை 07:19 AM வரை பூரம் பின்பு உத்திரம்
சந்திராஷ்டமம்: அவிட்டம்
சூலம்: கிழக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
06:30 - 07:30 வரை
மாலை:
04:30 - 05:30 வரை
இராகு காலம்:
காலை 07.30 - 09.00 வரை
எமகண்டம்:
காலை 10.30 - 12.00 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் வேண்டாம். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே,பல நல்ல சந்தர்ப்பங்களும், புதிய வாய்ப்புகளும் உருவாகும். பிரபலங்களின் சிநேகிதம் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். வாகன போக்குவரத்தில் கவனமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கடக ராசி அன்பர்களே, செய்வதை விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம். பயணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்ம ராசி நேயர்களே,மனதில் புது சிந்தனைகள் உதிக்கும். முக்கிய வேலைகளை யாரிடத்திலும் ஒப்படைக்க வேண்டாம். கடன் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி நேயர்களே, அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தில் சாதகமான விஷயங்கள் நடக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் கிடைக்கும். புது சொந்தங்களால் சில நெருக்கடிகள் வரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே, எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கும்ப ராசி நேயர்களே,குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியும். பண வரவு இருக்கும். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மீன ராசி நேயர்களே, தெய்வீக காரியங்களில் நாட்டம் வரும். நட்பு வழியில் நல்லது நடக்கும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
இன்றைய சிறப்பு:
நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!