பராபவ வருடம், வைகாசி மாதம் 12 ம் நாள்,
2026, மே 26 ம் நாள், செவ்வாய்
சூரிய உதயம்: காலை 05:52 AM
இன்றைய நட்சத்திரம்: காலை 07:46 AM வரை உத்திரம் பின்பு அஸ்தம்
சந்திராஷ்டமம்: சதயம்
சூலம்: வடக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
07:30 - 08:30 வரை
மாலை:
01:30 - 02:30 வரை
இராகு காலம்:
மாலை 03.00 - 04.30 வரை
எமகண்டம்:
காலை 09.00 - 10.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,புதிய விஷயங்களில் ஆர்வம் கூடும். பண வரவில் தாமதம் இருக்கும். வேண்டாம் என்று இருந்தவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே,எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நெருங்கிய உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். பயணங்களால் அசதி ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.
மிதுன ராசி அன்பர்களே,சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். முன் கோபத்தை குறைக்கவும். கடினமான காரியங்களையும் எளிதில் முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் நீங்கும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்ம ராசி நேயர்களே,புது முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் வீண் செலவுகள் வரும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே, பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம் ராசி நேயர்களே, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை தரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப நம்பிக்கையை காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களால் மதிப்பு உயரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தனுசு ராசி நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வெளியிடங்களில் யோசித்து பேசவும். மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே, எதையும் எதிர்கொள்ளும் மனபக்குவம் வரும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். நெடுந்தூர பயணங்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
மீன ராசி நேயர்களே, மனதில் நினைத்ததை நிறைவேற்ற முடியும். வேற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். உறவினர்களுடன் சண்டை போய் சமரசம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
இன்றைய சிறப்பு:
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!