27-May-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-27-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், வைகாசி மாதம் 13 ம் நாள்,

2026, மே 27 ம் நாள், புதன்


சூரிய உதயம்: காலை 05:52 AM


இன்றைய நட்சத்திரம்: காலை 08:42 AM வரை அஸ்தம் பின்பு சித்திரை

சந்திராஷ்டமம்: பூரட்டாதி

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
02:00 - 03:00 வரை

இராகு காலம்:
மாலை 12.00 - 01.30 வரை

எமகண்டம்:
காலை 07.30 - 09.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே, குடும்ப செலவுகளை குறைக்க பார்க்கவும். உடல் நலம் சீராகும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி அன்பர்களே,நடக்காமல் நின்று போன காரியம் இப்போது நடக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பழைய நண்பர்களின் சந்திக்கும் உற்சாகம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடக ராசி அன்பர்களே, புது பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். எதிரிகள் ஒதுங்கியே நிற்பர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்ம ராசி நேயர்களே,குடும்ப பெருமை உயரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெறும். உணவு கட்டுப்பாடு அவசியம் தேவைப்படும். நெந்தூர பயணங்களை புறக்கணிக்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே, மற்றவர்களிடம் பேசும்போது கனத்துடன் இருக்கவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

விருச்சிக ராசி நேயர்களே, பழைய பிரச்னையை தீர்க்க புது வழி ஒன்று கிடைக்கும். சொந்த பந்தங்களால் சில நன்மைகள் உண்டு. வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே, வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகர ராசி நேயர்களே, பிரபலங்கள் அறிமுகமாவர். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

கும்ப ராசி நேயர்களே,மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது. எதிர்த்து நின்று போராடும் சாமர்த்தியம் உண்டாகும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இரவு நேர பயணங்களில் பாதுகாப்பு அவசியம். உத்யோக மாற்றம் ஏற்படும்.


இன்றைய சிறப்பு:

சர்வ ஏகாதசி...

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE