பராபவ வருடம், வைகாசி மாதம் 15 ம் நாள்,
2026, மே 29 ம் நாள், வெள்ளி
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: பகல் 12:03 PM வரை சுவாதி பின்பு விசாகம்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ரேவதி
சூலம்: மேற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
09:30 - 10:30
மாலை:
04:30 - 05:30
இராகு காலம்:
10.30 - 12.00
எமகண்டம்:
03.00 - 04.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். திட்டமிட்ட பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
ரிஷப ராசி அன்பர்களே, குடும்ப நெருக்கடியை சமாளிக்க முடியும். யாருடைய கருத்துக்கும் செவி சாய்க்க வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மிதுன ராசி அன்பர்களே, நாள்பட்ட பிராத்தனைகள் நிறைவேறும். புது திட்டங்களை செயல்படுத்த முடியும். வெளியாட்களின் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கடக ராசி அன்பர்களே, ஆன்மீகம் சார்ந்த ஈடுபாடு மனநிறைவை தரும். பிரியமானவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் இருக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்ம ராசி நேயர்களே, சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வீட்டிற்கு சொந்த பந்தங்கள் வருகை தருவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறைந்து நிலைமை சீரடையும். பெரியோர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம் ராசி நேயர்களே, இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். சுப செலவுகள் அதிகம் வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,நல்லவர்கள் அறிமுகத்தால் ஆதாயங்கள் உண்டு. சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உறவினர்களிடம் இருந்த மனவருத்தம் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப தேவைகளை நிறைவேற்ற முடியும். யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் நெருக்கடிகள் வெகுவாக குறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கும்ப ராசி நேயர்களே, குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பெரியோர்களின் அறிவுரை கிட்டும். தொழில், வியாபாரம் மேன்மைநிலை அடையும்.
மீன ராசி நேயர்களே, உங்கள் புத்தி சாமர்த்தியம் வெளிப்படும். விலகி சென்ற பழைய சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். புது தொழில் யோகம் அமையும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்,
ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!