பராபவ வருடம், வைகாசி மாதம் 18 ம் நாள்,
2026, ஜூன் 01 ம் நாள், திங்கள்
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: மாலை 07:21 PM வரை கேட்டை பின்பு மூலம்
சந்திராஷ்டமம்: பரணி கார்த்திகை
சூலம்: கிழக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
06:30 - 07:30
மாலை:
04:30 - 05:30
இராகு காலம்:
07.30 - 09.00
எமகண்டம்:
10.30 - 12.00
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
ரிஷப ராசி அன்பர்களே, தெய்வ வழிபாடு நன்மையை தரும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வெளியாட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு செய்ய நினைக்கும் காரியங்கள் கை கூடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவர். புது தொழில் யோகம் அமையும்.
சிம்ம ராசி நேயர்களே, பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி ராசி நேயர்களே, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். உறவினர்கள் வகையில் சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்ப பொருளாதாரத்தில் சிக்கல் வரும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப வருமானத்தை பெருக்க முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களுடன் சிறு சிறு விரிசல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் திருப்தி நிலை உண்டாகும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
மகர ராசி நேயர்களே, எந்த காரியத்திலும் அவசரபட வேண்டாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்தல் அவசியம். உத்யோகக்தில் அமைதி நிலவும்.
கும்ப ராசி நேயர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். புதிய முயற்சிகள் கைகூடும். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். சொந்த பந்தங்களால் நிறைய நன்மைகள் உண்டு. முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
இன்றைய சிறப்பு:
நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!