பராபவ வருடம், வைகாசி மாதம் 19 ம் நாள்,
2026, ஜூன் 02 ம் நாள், செவ்வாய்
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: மூலம்
சந்திராஷ்டமம்: கார்த்திகை
சூலம்: வடக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
07.30 - 09.00
மாலை:
04:30 - 05:30
இராகு காலம்:
03.00 - 04.30
எமகண்டம்:
09.00 - 10.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே, கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷப ராசி அன்பர்களே, தியானத்தால் மனம் நிம்மதியடையும். புது நண்பர்களை அனுசரித்து செல்லவும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுன ராசி அன்பர்களே, பொது வாழ்வில் மதிப்பு கூடும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி அன்பர்களே, எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் குறையும். தொட்டது துலங்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் சுமூக உறவு ஏற்படும். நல்லவர்களின் நட்பு நன்மையை தரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.
கன்னி ராசி நேயர்களே, எதிர்பாலித்தினரால் நன்மை உண்டாகும். பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. நட்பால் ஆதாயம் உண்டு. முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
விருச்சிக ராசி நேயர்களே, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். பயணங்கள் தள்ளி போகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகர ராசி நேயர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். முன் கோபத்தை குறைப்பது பல வகையிலும் நல்லது. பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். புதிய முயற்சிகள் நாளடைவில் கைகூடும். பயணங்கள் திட்டமிட்டபடியே அமையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீன ராசி நேயர்களே, எதையும் தாங்கும் மனவலிமைக் உண்டாகும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
இன்றைய சிறப்பு:
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!