பராபவ வருடம், வைகாசி மாதம் 21 ம் நாள்,
2026, ஜூன் 04 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 12:10 AM வரை பூராடம் பின்பு உத்திராடம்
சந்திராஷ்டமம்: திருவாதிரை
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30
மாலை:
12:30 - 01:30
இராகு காலம்:
01.30 - 03.00
எமகண்டம்:
06.00 - 07.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தில் ஏற்றமான சூழ்நிலை உருவாகும். தடைகளை தகர்த்தெறிய முடியும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை.
ரிஷப ராசி அன்பர்களே,தேக ஆரோக்கியம் பலம் பெரும். யாருடைய விவகாரங்களிலும் தலையிட வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கடக ராசி அன்பர்களே, மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரைகள் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
சிம்ம ராசி நேயர்களே,குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். பகைவர்களால் சாதிகளை முறியடிக்க முடியும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கன்னி ராசி நேயர்களே, குடும்ப உறவுகளை பலப்படுத்த முடியும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களால் அலைச்சல் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் வரும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் செல்லவும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப செலவுகள் அதிகரித்து கொண்டு போகும். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் சேர்த்து பார்க்க வேண்டி வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு ராசி நேயர்களே, வித்தியாசமான அணுகுமுறை காரிய வெற்றிக்கு உதவும். எதையும் தைரியமாக பேசுவது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே, மகர ராசி அன்பர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இனம் தெரியாத ஒரு சில கவலைகள் வந்து போகும். சொந்த பந்தங்களால் நிறைய நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
கும்ப ராசி நேயர்களே,வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிக்கல் இருக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
மீன ராசி நேயர்களே, பிடிவாத குணத்தை கைவிடுவது நல்லது. பிரியமானவர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், வாஸ்து நாள்,
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!