பராபவ வருடம், வைகாசி மாதம் 22 ம் நாள்,
2026, ஜூன் 05 ம் நாள், வெள்ளி
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 02:09 AM வரை உத்திராடம் பின்பு திருவோணம்
சந்திராஷ்டமம்: புனர்பூசம்
சூலம்: மேற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
09:30 - 10:30
மாலை:
04:30 - 05:30
இராகு காலம்:
10.30 - 12.00
எமகண்டம்:
03.00 - 04.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,தீர யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மையை தரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். கடன் நெருக்கடிகள் அவ்வப்போது வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
ரிஷப ராசி அன்பர்களே,குடும்பத்தில் புதுமையான காரியங்கள் நடக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வந்து நிற்பர். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தெய்வ வழிபாடு மூலம் மனகுறைகள் நீங்கும். மறைமுகப் எதிர்ப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்ம ராசி நேயர்களே,குடும்ப பிரச்சனைகள் வெகுவாக குறையும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி ராசி நேயர்களே, உங்கள் சுய நம்பிக்கை திறன்கள் அதிகரிக்கும். புது நண்பர்களின் அறிமுகம் புத்துணர்ச்சியை தரும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு .
துலாம் ராசி நேயர்களே, குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்களிடம் இதுநாள் வரை இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப பொருளாதாரத்தில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களை மனதில் அனுமதிக்க வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகர ராசி நேயர்களே, முக்கிய வேலைகள் முடிவடைவதில் தாமதம் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப ராசி நேயர்களே,ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வரும். வெளி உணவுகளை குறைத்துகொள்ளவும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரம் சிறக்கும்
மீன ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய ஒரு பயம் இருக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்
இன்றைய சிறப்பு:
திருவோண விரதம்,
ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!