பராபவ வருடம், வைகாசி மாதம் 23 ம் நாள்,
2026, ஜூன் 06 ம் நாள், சனி
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 03:43 AM வரை திருவோணம் பின்பு அவிட்டம்
சந்திராஷ்டமம்: பூசம்
சூலம்: கிழக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30
மாலை:
04:30 - 05:30
இராகு காலம்:
காலை 09.00 - 10.30
எமகண்டம்:
மதியம் 01.30 - 03.00
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தினர் செயல்பாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே,குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உற்றார், உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
மிதுன ராசி அன்பர்களே,எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். தேக நலனில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, தியானதால் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். அருகாமையில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஆதரவு பெருகும்
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒரு சூழல் நிலவும் புத்தி சாதூர்யத்தால் தடைகளை தகர்த்தெறிய முடியும். கணவன் மனைவிக்குள் வீட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம் ராசி நேயர்களே, சமூகத்தில் நல்ல மதிப்பை பெற இயலும். களைப்பு நீங்கி புது உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் சின்ன மனவருத்தம் வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
விருச்சிக ராசி நேயர்களே,
தனுசு ராசி நேயர்களே, நல்ல மனிதர்களின் சகவாசம் நன்மையை தரும். பொருளாதர நிலையில் சின்ன சரிவுகள் வரும். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி பெற முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மகர ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட காரியம் ஒன்று தாமதமாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்ப ராசி நேயர்களே,முக்கிய காரியங்கள் முடிவடையும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். எதிர்பாரத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்
மீன ராசி நேயர்களே, மற்றவர்கள் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். புதுமையான விஷயங்களில் ஆர்வம் வரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.
இன்றைய சிறப்பு:
தேய்பிறை ஷஷ்டி,
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!