பராபவ வருடம், வைகாசி மாதம் 24 ம் நாள்,
2026, ஜூன் 07 ம் நாள், ஞாயிறு
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 04:47 AM வரை அவிட்டம் பின்பு சதயம்
சந்திராஷ்டமம்: ஆயில்யம்
சூலம்: மேற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
07:30 - 08:30
மாலை:
03:30 - 04:30
இராகு காலம்:
மாலை 04.30 - 06.00
எமகண்டம்:
மதியம் 12.00 - 01.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தில் சில நல்ல விஷயங்கள் நடக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். பணத் தேவைகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே,பழமையான விஷயங்களில் ஆர்வம் வரும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிசுமை குறையும்.
மிதுன ராசி அன்பர்களே,புது திட்டங்கள் தொடர்பாக நல் யோசனைகள் வரும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். வேண்டியவர்களிடம் வீட்டுக்கொடுத்து போகவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, அதாயம் இல்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம். பெரியோர்களின் ஆசி கிட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் சில மருத்துவ செலவுகள் வரும். பெற்றோர்கள் நலனில் தனி கவனம் செலுத்தவும். சாட்சி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கன்னி ராசி நேயர்களே, பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம் ராசி நேயர்களே, சமூக அந்தஸ்து உடையவர்களின் தொடர்பு கிடைக்கும். தொடர் வேலைகளால் உடல் சோர்வு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அன்பு மழை பொழிவர். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
விருச்சிக ராசி நேயர்களே, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
தனுசு ராசி நேயர்களே, ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு வரும். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மகர ராசி நேயர்களே, குடும்ப செல்வாக்கை உயர்த்த முடியும். முன்கோபத்தை குறைக்கவும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்ப ராசி நேயர்களே,யாரையும் குறைத்து பேச வேண்டாம். சில அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிரிகளின் பலவீனம் அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் விருந்தியடையும்.
மீன ராசி நேயர்களே, மனதில் புது நம்பிக்கை பிறக்கும். தூரத்து சொந்தங்களின் உதவி கிடைக்கும். பெற்றோர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்,
மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!