08-June-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-08-june-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், வைகாசி மாதம் 25 ம் நாள்,

2026, ஜூன் 08 ம் நாள், திங்கள்


சூரிய உதயம்: காலை 05:52


இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 05:21 AM வரை சதயம் பின்பு பூரட்டாதி

சந்திராஷ்டமம்: மகம்

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
06:30 - 07:30

மாலை:
04:30 - 05:30

இராகு காலம்:
காலை 07.30 - 09.00

எமகண்டம்:
காலை 10.30 - 12.00


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே, பேச்சு திறமை அதிகரிக்கும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். நீண்ட தூர பயணங்களை அறவே தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே, தினசரி தியானத்தால் மன அமைதி ஏற்படும். உணவு கட்டுப்பாடு அவசியம். பிரியமானவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

மிதுன ராசி அன்பர்களே, நீண்ட நாள் முயற்சிகள் கைக்கூடும். யாருடைய தவறையும் சுட்டி காட்ட வேண்டாம். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் பதட்டமான சூழல் நிலவும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே, செய்யும் காரியத்தில் கவனமும், சுறுசுறுப்பும் தேவை. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். எதிரிகள் காணாமல் போவர். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

கன்னி ராசி நேயர்களே, முன்கோபத்தை குறைத்துக்கொண்டால் நன்மை உண்டாகும். நண்பர்களால் சில சங்கடங்கள் வரும். கொடுக்கல், வாங்லில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தின் பேரதாரவை பெற முடியும். உடல் சோர்வு அகன்று உற்சாகம் ஏற்படும். பொது நல காரியங்களில் ஈடுபாடு வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

விருச்சிக ராசி நேயர்களே, புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. பிரியமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

தனுசு ராசி நேயர்களே, பொருளாதார நிலை சீராகும். வீட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகர ராசி நேயர்களே, உங்கள் திட்டங்களை செயல்படுத்த வழி கிடைக்கும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி நேயர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் வரும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மீன ராசி நேயர்களே, மனதில் ஒரு தெளிவு பிறக்கும். ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க வேண்டிவரும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.


இன்றைய சிறப்பு:

அஷ்டமி,

நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE