பராபவ வருடம், வைகாசி மாதம் 26 ம் நாள்,
2026, ஜூன் 09 ம் நாள், செவ்வாய்
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 05:25 AM வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
சந்திராஷ்டமம்: பூரம்
சூலம்: வடக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
07:30 - 08:30
மாலை:
04:30 - 05:30
இராகு காலம்:
03.00 - 04.30
எமகண்டம்:
09.00 - 10.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,பொருளாதார வளர்ச்சி இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி அன்பர்களே,பல விதத்தில் சுகமும், சந்தோஷமும் கிடைக்கும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பெரியோர்களின் அன்பை பெற முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
மிதுன ராசி அன்பர்களே,எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகுவது நல்லது. சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உறவினர்களின் அன்பு மனதில் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
கடக ராசி அன்பர்களே, மன உறுதியுடனும் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி நிச்சயம். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே,வெளி நபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தேவையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தவும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே, எடுத்த காரியத்தை முடிப்பதில் சில சிரமம் இருக்கும். வரவுக்கேற்ற, செலவுகளும் பின் தொடரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வருவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.
துலாம் ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் நற்பலனை தரும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். திட்டமிட்ட வேலைகள் தடைகள் இல்லாமல் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே, மன வலிமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிக செலவழிக்க வேண்டாம். பெற்றோரின் ஆலோசனை கைகொடுக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே, சுயமரியாதையை விட்டு தர வேண்டாம். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே,நீண்ட நாள் ஆசைகள் இறுதியாக நிறைவேறும். விஐபிகளின் தொடர்பால் நன்மைகள் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கும். வேண்டபட்டவர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
இன்றைய சிறப்பு:
நவமி,
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!