பராபவ வருடம், வைகாசி மாதம் 27 ம் நாள்,
2026, ஜூன் 10 ம் நாள், புதன்
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 05:02 AM வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
சந்திராஷ்டமம்: உத்திரம்
சூலம்: வடக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
09:30 - 10:30
மாலை:
01:30 - 02:30
இராகு காலம்:
12.00 - 01.30
எமகண்டம்:
07.30 - 09.00
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தில் சேமிக்க பழகவும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே,புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். தேக நலனில் கவனம் தேவை. நண்பர்களால் சில செலவினங்கள் வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி அன்பர்களே,எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். பண விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கடக ராசி அன்பர்களே, குடும்ப நலன் கருதி செயல்படுவது நல்லது. யாரையும் குறை சொல்லாமல் இருக்கவும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே,மனதில் தெய்வீக சிந்தனைகள் வரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்
கன்னி ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். குழப்பான மனநிலைலிருந்து விடுபட முடியும். இஷ்ட தெய்வ வழிபாடு நற்பலனை தரும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.
துலாம் ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிக ராசி நேயர்களே,கோப தாபங்களை குறைத்துக்கொண்டால் நன்மை உண்டாகும். மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு ராசி நேயர்களே, சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். நல்ல மனிதர்களின் சந்திப்பு நிகழும். கொடுக்கல், வாங்கலில் அதிக கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே, நல்ல தகவல் ஒன்று காதில் வந்து விழும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து போகவும். எதிர்பாராத செலவுகள் நிறைய வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்ப ராசி நேயர்களே,ரகசியங்களை பாதுகாப்பதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீன ராசி நேயர்களே, அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். பாதியில் நின்ற காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உறவினர்கள் கேட்டதை செய்து தர இயலும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
இன்றைய சிறப்பு:
கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!