பராபவ வருடம், வைகாசி மாதம் 28 ம் நாள்,
2026, ஜூன் 11 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 04:14 AM வரை ரேவதி பின்பு அஸ்வினி
சந்திராஷ்டமம்: அஸ்தம்
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30
மாலை:
12:30 - 01:30
இராகு காலம்:
மதியம் 01.30 - 03.00
எமகண்டம்:
காலை 06.00 - 07.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்ப விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்ளவும். ஆன்மிக ஈடுபாடு வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே,குடும்ப அடிப்படை வசதிகள் பெருகும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். தேக நலன் பலம் பெரும். விலகி சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்
கடக ராசி அன்பர்களே, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசவும். சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே,குடும்ப பொறுப்புகளை கவனிக்க வேண்டிவரும். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் வேண்டாம். பெற்றோருடன் சின்ன கருத்து வேறுபாடு வரும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே, எதிர்பார்ப்புகள் எதுவாகினும் அது நிச்சயம் பூர்த்தியாகும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் உருவாகும். வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
விருச்சிக ராசி நேயர்களே,மனதில் தெளிவும், உற்சாகமும் பிறக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். நண்பர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
தனுசு ராசி நேயர்களே, சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் கையாள முடியும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகர ராசி நேயர்களே, ஆக்கபூர்வமாகச் சிந்தித்து சிறப்பாகச் செயலாற்ற முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே,குடும்ப பெரியோர்கள் நல்வழி காட்டுவர். மனதில் தெளிவு நிலை உண்டாகும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மீன ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. உணவில் கவனமும், சீரான ஓய்வும் அவசியம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
இன்றைய சிறப்பு:
சர்வ ஏகாதசி,
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!