கும்பம்: பிப்ரவரி மாத ராசி பலன் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

feb-2025-monthly-horoscope-of-kumbam-rasi-aquarius
Spiritual

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

கும்ப ராசி அன்பர்களே,

பொறுமையும் நிதான குணமும் உடைய நீங்கள் இயற்கையிலேயே இளகிய மனம் படைத்தவர்கள். உடல் ஆரோக்கியம் கூடி, மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து எதிர்பார்த்த அளவு இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். காரிய வெற்றி தரும்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும், கடன் பிரச்சினைகள் தீரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமை அவசியம். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் சில தொந்தரவுகள் ஏற்படலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

அரசியல் துறையினருக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். கலைத் துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். சக கலைஞர்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன் மதிப்பை பெறுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்து பாராட்டுக்கள் பெறுவீர்கள்.

தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். தேவையான உதவிகள் தேவையான சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்கள் தங்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்

எல்லா வகையிலும் நன்மை ஏற்படும் மாதமிது.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு ஆனந்தத்தை கூட்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 15, 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

SCROLL TO NEXT ARTICLE