24-June-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-24-june-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், ஆனி மாதம் 10 ம் நாள்,

2026, ஜூன் 24 ம் நாள், புதன்


சூரிய உதயம்: காலை 05:54


இன்றைய நட்சத்திரம்: மாலை 05:45 PM வரை சித்திரை பின்பு சுவாதி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி உத்திரட்டாதி

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30

மாலை:
04:30 - 05:30

இராகு காலம்:
12.00 - 01.30

எமகண்டம்:
07.30 - 09.00


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,விஐபிகளின் அறிமுகத்தை பெற இயலும். பெற்றோரின் அன்பையும், ஆதரவையும் பெற முடியும். தூர பயணங்களால் வீண் அலைச்சல் வரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,மனதில் தைரியமும், உடம்பில் தெம்பும் பிறக்கும். முக்கிய விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும். சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க பழகவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே, மற்றவர்களிடம் எப்போதும் உதவி கேட்க தயக்கம் வரும். நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். யாரையும் முழுவதும் சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர இயலும். மனதில் இருந்த வீண் கவலைகள் அகலும். உணவுக் கட்டுப்பாடு ஆரோக்கியத்திற்கு அவசியம். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே, திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிக்க முடியும். வாக்குறுதிகளைக் கவனமாக அளிப்பது நல்லது. நெருக்கமானவர்களிடம் சின்ன விரிசல்கள் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்படும் சிரமங்கள் தற்காலிகமானதாக இருக்கும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பப் பணிகளைத் தனி ஆளாகக் கையாள முடியும். புது நட்பால் சில தொந்தரவுகள் வரும். அவசரச் செலவுகளை திட்டமிடுவது மிக முக்கியம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, திறமைகளை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்கள் வரும். மறைமுக விமர்சனமும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கடன் நெருக்கடிகள் அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி நேயர்களே, முக்கிய வேலைகளை விரைந்து முடிக்க முடியும். பல ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். புதிய சிநேகிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்ப ராசி நேயர்களே,குடும்பம் முன்னேற்றத்தை நோக்கியே செல்லும். விலகி சென்றவர்கள் கூட விரும்பி வந்து சேருவர். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மீன ராசி நேயர்களே, தியானம் மற்றும் யோகா இரண்டும் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் வரும்.


இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள்,

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE