பராபவ வருடம், ஆனி மாதம் 11 ம் நாள்,
2026, ஜூன் 25 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 05:55
இன்றைய நட்சத்திரம்: இரவு 07:33 PM வரை சுவாதி பின்பு விசாகம்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ரேவதி
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30
மாலை:
12:30 - 01:30
இராகு காலம்:
01.30 - 03.00
எமகண்டம்:
06.00 - 07.30
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,யாருடைய விமர்சனத்திற்கும் செவி சாய்க்க வேண்டாம். மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்ய வேண்டிவரும். புதிய நட்பு வட்டாரத்தை உருவாக்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே,குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயங்கள் உண்டு. வாகன பயணத்தில் நிதானம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்படும்.
மிதுன ராசி அன்பர்களே,தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையம்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் நாள்பட்ட பிரச்சனைகள் தீரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வெளி உணவுகளை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்ம ராசி நேயர்களே,வெளிவட்டாரத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். ஒதுங்கியே நின்றவர்கள் கூட விரும்பி வந்து சேருவர். திடீர் மருத்துவச் செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
கன்னி ராசி நேயர்களே, புதிய நபர்களின் சந்திப்பால் ஆதாயம் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை எண்ணத்தை நீக்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். புது தொழில் யோகம் அமையும்.
துலாம் ராசி நேயர்களே, பொருளாதார முன்னேற்றம் இருக்கும். நம்பியவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தர இயலும். யாரையும் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
விருச்சிக ராசி நேயர்களே,ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடிவடையும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்திற்காக அதிக நேரம் உழைக்க வேண்டிவரும். கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்ய முடியும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மகர ராசி நேயர்களே, குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப ராசி நேயர்களே,முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். பல நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
மீன ராசி நேயர்களே, பழைய பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு உண்டு. பிரபலங்களின் தொடர்பு ஆதாயத்தை தரும். அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி,
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!