பராபவ வருடம், ஆனி மாதம் 22 ம் நாள்,
2026, ஜூலை 06 ம் நாள், திங்கள்
சூரிய உதயம்: காலை 05:58
இன்றைய நட்சத்திரம்: பகல் 01:22 PM வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
சந்திராஷ்டமம்: மகம் பூரம்
சூலம்: கிழக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
06:15 - 07:15
மாலை:
04:45 - 05:45
இராகு காலம்:
07.30 - 09.00
எமகண்டம்:
10.30 - 12.00
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். உடல் நலம் சீர்பெறும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷப ராசி அன்பர்களே,மனதில் தெளிவு நிலை உண்டாகும். விஐபிகளின் தொடர்புகள் கிடைக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். சாதுரியமான பேச்சால் எதையும் சாதிக்க முடியும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் இருக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உங்கள் தேவைகள் நிறைவேற வழி பிறக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். சிந்தனை திறன் அதிகரிக்கும். பண வரவில் ஏற்ற இறக்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்
விருச்சிக ராசி நேயர்களே,எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படவும். நாள்பட்ட பிரச்சனைக்கு நல்ல தீர்வு வரும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் பெரியளவில் ஆதரவு கிடைக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் சேர்த்து பார்க்க வேண்டி வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மகர ராசி நேயர்களே, எடுத்த வேலையைத் தடையின்றி கச்சிதமாக முடிக்க முடியும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே,குடும்பத்திற்கு யோகமான பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீன ராசி நேயர்களே, எதிர்கால திட்டங்கள் ஒவ்வொன்றாக கைகூடி வரும். சொந்த பந்தங்கள் முழு ஆதரவு தருவர். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.
இன்றைய சிறப்பு:
தேய்பிறை ஷஷ்டி,
நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!