இன்றைய ராசி பலன்கள் - 01-01-2025

மேஷம்: நீண்ட நாள் தடையாக இருந்த திருமண பேச்சுவார்த்தை இன்று சுமுகமாக முடியும். உறவினர்களுடன் மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் நன்மை ஏற்படும்.
ரிஷபம்: எடுத்த காரியம் சிறப்பாக முடியும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் நன்மை பயக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
மிதுனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியம் சிறிது இழுபறியாகும். குடும்பத்தினரின் உணர்வுகளை மதிக்கவும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
கடகம்: நல்ல எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் மீண்டும் செல்வாக்கை பெறுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்: வீட்டில் வீண் குழப்பங்கள் விலகி நிம்மதி பிறக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி ஏற்படும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம், வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: மன தைரியம் அதிகரிக்கும். நினைத்த இடத்தில் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
துலாம்: வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் உரிய பலனை கொடுக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல எண்ணம் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்: பிள்ளைகளுக்காக சேமிப்பை திட்டமிடுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: செல்வம், செல்வாக்கு கூடும். சவாலான விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. உத்தியோகத்தில் வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
மகரம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது சிறப்பை தரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் வெற்றி கிடைக்கும். விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த கவனம் செலுத்துவீர்கள்.
கும்பம்: உடற்சோர்வு நீங்கி முகப் பொலிவு கூடும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். புது வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். வியாபாரம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
Tags:
#Daily Horoscope #tamil rasi palangal #daily rasi palan #jodhidam #இன்றைய ராசி பலன்