இன்றைய ராசி பலன்கள் - 08-02-2025

08-02-2025 - இன்றைய ராசி பலன்கள்:
மேஷம்: உங்கள் தொழில், வியாபாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள பணம் இன்று கிடைக்கலாம். வேலைகளைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி, உடல்நல பிரச்சனைகளில் கவனம் தேவை. நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்: பணியிடத்தில் தடைகள் தாண்டி வேலைகளை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் தொடர்பாக யாரையும் கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்பதில் சுப செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்: துணையின் உணர்வுகளைப் புரிந்து நடக்கவும். திறமையால் வேலை எளிதாகும். வீட்டில் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் சாதகமாக சூழ்நிலை இருக்கும்.
கடகம்: தீடீரென பழைய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை ஒதுக்கவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்து பேச்சு ஆரம்பிக்கும்.
சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடித்து ஆனந்தம் அடைவீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா திட்டமிடுவீர்கள். பழைய கடன் வர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி: உங்கள் பேச்சு, செயலில் நிதானம் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவேண்டிய நாள். வாழ்க்கை இனிமையானதாக அமையும். சில விஷயங்களுக்காக குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு தேர்வு கிடைக்கும். பணியிடத்தில் ஒழுக்கத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்படவும்.
துலாம்: படிப்பில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வருமானத்தை பெருக்க பாடுபடுவார்கள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்: பணியிடத்தில் உங்கள் வேலை வெற்றியை தரும். கடனை திரும்ப செலுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பயண வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள்.
தனுசு: காதல் வாழ்க்கையில் கசப்புகள் மறையும். புதிய வணிக வாய்ப்புகள் கிடைத்து, பணிச் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வேலை தொடர்பான வெளியூர் பயணங்கள் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
மகரம்: வியாபார முன்னேற்றம் தரக் கூடிய நாள். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு செயலிலும் வாழ்க்கைத் துணையின் அறிவுரையை பெறுவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கும்பம்: வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். கல்வி தொடர்பான சில தடைகள் அகலும். பணி சூழல் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் ஆலோசனை அங்கீகரிக்கப்படும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கூடும்.
மீனம்: வேலை தொடர்பான சிக்கல்கள் தீரும். சாதகமான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் அமையும். வியாபார விருத்தி ஏற்படும்.
Tags:
#Daily Horoscope #tamil rasi palangal #daily rasi palan #jodhidam #இன்றைய ராசி பலன்