வடலூர் சத்திய ஞான சபையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம்

jyoti-darshan-at-vadalur-sathya-gnana-sabha
Spiritual

வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் புகழ்பெற்ற 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நிகழ்வு இன்று (பிப்.,11) காலை 6மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது . இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த ராமலிங்க வள்ளலார் இறைவனோடு ஜோதி வடிவமாக கலந்தார்.

வள்ளலார் இறைவனோடு ஜோதி வடிவமாக கலந்ததை நினைவு கூறும் விதமாகவும், வள்ளலார் மக்களுக்கு அருள்பாலிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளன்று 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, 154 - வது தைப்பூச திருவிழாவான இன்று கருப்பு திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காலை 6மணிக்கு கோலாகலமாக நடைபெறத்தது.

மேலும் இன்று காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கு ஜோதி தரிசனம் நடை பெறவுள்ளது.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி,
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!!

SCROLL TO NEXT ARTICLE