ரூ100 கோடி வசூலை கடந்த நடிகர் தனுஷின் குபேரா!

ஜூன் 20 ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியான குபேரா திரைப்படம் வெளியானது. குபேரா திரைப்படத்தில் தனுஷ்-ன் கதாபாத்திரமும் நடிப்பும் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இன்றுடன் (ஜூன் 25) ஆறு நாட்கள் ஆன நிலையில் முதல் ஐந்து நாளில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பது குறித்து காணலாம்.
படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் அங்கு மட்டும் ரூ.60 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷின் முந்தைய படமான ராயன் படத்தைத் தொடர்ந்து இந்த குபேரா திரைப்படமும் ரூ100 கோடி வசூலை கொடுத்துள்ளது தனுஷ்-கு மட்டுமன்றி அவருடைய ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.
Tags:
#kuberaa review #kuberaa collection #kuberaa movie #kuberaa news #kuberaa release