ஜனநாயகன் படத்துக்கு விஜய்க்கு சம்பளம் இவ்ளோவா......? JanaNayagan update

27 Jun, 2025 07:10 AM
vijay-reaches-the-peak-in-indian-cinema-its-a-jananayakan-salary-update

இன்றைய தேதியில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத மற்றும் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், தான் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்துக்காக ரூ. 250 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜனநாயகன்’ விஜயின் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. அதன் படி, தினமும் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த பேச்சு மற்றும் தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி ‘ஜனநாயகன்’ படத்துக்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இப்படியான தகவல்கள் அதிகம் உலா வருகின்றது குறிப்பிட தக்கது.

இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பர் என்று சொல்லப்படுகிறது. இதுவே அவருடைய பெரும் வளர்ச்சியைக் காட்டுவதாக இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

மேலும், இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கும் சமயத்தில் அதை உதறிவிட்டு ‘சினிமா வேண்டாம்’ என்று அரசியலுக்கு வந்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இதன் முடிவு 2026-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் எப்படி எதிரொலிக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags:

#Jananayakan salary #actor Vijay #JanaNayagan update #ஜனநாயகன் #ஜனநாயகன் சம்பளம்

Trending now

We @ Social Media