Registration for NEET UG -2025: தொடங்கியது NEET 2025 காண விண்ணப்ப பதிவு !!!. முக்கிய தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்

NEET (UG) Registration 2025: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test) - NEET என்பது மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை (National Testing Agency) தேசிய அளவில் நடத்தும் நுழைவுத் தேர்வாகும்.
தேசிய தேர்வு முகமை 2025 - ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை பெறப்படும் என்றும் தேசிய அளவில் மே 4-ம் தேதி தேர்வு என்றும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் தொடர்பான முக்கிய தேதிகள் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன் படி,
NEET UG Registration 2025 and Exam & Important Dates:
விண்ணப்பம் தொடக்கம்: 07.02.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2025
விண்ணப்பம் திருத்தம்: 09.03.2025 to 11.03.2025
தேர்வு மையம் அறிவிப்பு: 26.04.2025
அட்மிட் கார்டு வெளியீடு: 01.05.2025
தேர்வு தேதி: 04.05.2025
முடிவு வெளியீடு: 14.06.2025 (தோராயமாக)
NEET UG Registration: விண்ணப்பிக்கும் முறை
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை அதிகார பூர்வ இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் தொகுப்பை காண https://nta.ac.in/Download/Notice/Notice_20250124193716.pdf
website URL: https://neet.nta.nic.in/
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (Required Documents for NEET):
* இமெயில் முகவரி
* செல்போன் எண்
* 10-ம் வகுப்பு & 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
* ஆதார் எண்
* பெற்றோர்களின் பெயர்கள்
* மாணவரின் புகைப்படம் & கையொப்பம்
* மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவையிருப்பின்)
* கட்டைவிரல் பதிவு
நீட் தேர்வுக்கான கட்டணம் (Fees for NEET):
இளநிலை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் தங்கள் பிரிவின் அடிப்படையில் கீழ்கண்டவாறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு - ரூ.1,700
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - ரூ.1,600
எஸ்சி/எஸ்டி - ரூ.1,000
மாற்றுத்திறனாளிகள் - ரூ.1,000
திருநங்கைகள் - ரூ.1,000
வெளிநாடுகளில் இருந்து எழுதுபவர்கள் - ரூ.9,500
நீட் தேர்வு முறை (NEET Exam Pattern):
இந்தாண்டு நீட் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவாக நீட் தேர்வு வினாத்தாள் Section A மற்றும் Section B என அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்தாண்டு முதல் Section B என்பது நீக்கப்பட்டு, மொத்தம் 180 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். பாடவாரியாக,
இயற்பியல் - 45 கேள்விகள்,
வேதியியல் - 45 கேள்விகள்,
உயிரியல் - 90 கேள்விகள்,
என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மேலும் தேர்வு 3 மணி நேரத்திற்கு நடைபெறும்.
மாணவர்களே, கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்க தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வின் போதும் நிதானமாக செயல்பட முன்கூட்டியே திட்டமிடவும்.
வாழ்த்துக்கள் மாணவர்களே !!!
Tags:
#neet 2025 #neet 2025 registration #neet ug 2025 registration #neet ug registration form 2025 #Registration for NEET UG - 2025