இன்றைய முக்கிய செய்திகள் – 24 June 2025

மேற்கு வங்க சட்டப்பேரவையிலிருந்து 4 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
மேற்கு வங்க சட்டபேரவையில் முன்பு கூறப்பட்ட சில கருத்துகளை நீக்குவது தொடர்பான விவாதத்தின்போது எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் பிமன் பானர்ஜி பாஜக எம்எல்ஏக்கள் தீபக் பர்மன், சங்கர் கோஷ், அக்னிமித்ர பால் மற்றும் மனோஜ் ஓரான் ஆகிய நான்கு பேரையும் எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை: உமர் அப்துல்லா:
முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும் என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தவெக-வினர் மீது 53 வழக்குகள் பதிவு:
விஜய் பிறந்த நாளுக்கு அனுமதியின்றி விதிகளை மீறி பேனர் வைத்ததாக, தவெக-வினர் மீது போலீஸார் 53 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்..
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப்
இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போர் பதற்றம் எதிரொலி: துபாய், சார்ஜா செல்லும் விமான சேவைகள் ரத்து:
ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குறையும் தங்கம் விலை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 24) பவுனுக்கு ரூ.600 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.73,240-க்கு விற்பனை ஆகிறது.
ஜூலை 1 முதல் ஜேசிபி, போர்வெல் வாகனங்களை பயன்படுத்த தடை:
கொடைக்கானலில் மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் வரும் ஜூலை 1 -ம் தேதி முதல் ஜேசிபி, போர்வெல் போன்ற வாகனங்களை பயன்படுத்த தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் ஜூலை 10-ல் ஆடு, மாடுகளுக்கு மாநாடு: சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் ஜூலை 10-ம் தேதி ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடக்கும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
ரூ.2000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்
அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் 13 ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான திறனை மேம்படுத்த ரூ.1,981.90 கோடி மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Tags:
#Tamil news live updates #இன்றைய செய்திகள் #Daily Tamil news #Tamil news updates #tamil news live