உயரும் ரயில் கட்டணம்: ஜூலை 1 முதல் அமலாகிறது?

25 Jun, 2025 06:24 AM
rising-train-fares-effective-from-july-1

புதுடில்லி: நீண்ட தூர மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் இதன்படி ரயில்களில் சாதாரண 2ம் வகுப்பில் பணிக்க 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை என்றும் அதே நேரம் 500 கி.மீ.,க்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், இந்த கட்டண உயர்வு 'ஏசி' அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 500 கி.மீ., அதிகமான பயணத்தில் 1 கி.மீ க்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு, கட்டணம் உயர்த்தப்படுகிறது. உதாரணத்துக்கு, 1,000 கி.மீ பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை விட 10 ரூபாய் அதிகரிக்கும்.

அதே போல், 'ஏசி' பெட்டிகளில் 500 கி.மீ.,க்கு மேல், 1 கி.மீ.,க்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் எனவும், குறைந்த அளவே உயர்த்தப்பட்டுள்ளதால் பயணியருக்கு பெரிதாக சிரமம் இருக்காது எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:

#train fair #railways #train ticket #ரயில் கட்டணம் #எக்ஸ்பிரஸ் ரயில்

Trending now

We @ Social Media