பதவி விலகிய ZOHO CEO ஸ்ரீதர் வேம்பு. காரணம் என்ன?

reason-behind-zoho-ceo-sridhar-vembu-resign
Latest News

ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO ) பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:

நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகள், குறிப்பாக AI-யின் சமீபத்திய முக்கிய முன்னேற்றங்கள் உட்பட, எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டு பணியைத் தொடர்வதோடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் முழுநேரமும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ZOHO Corporation நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி, ஆழமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்குப் பொறுப்பான தலைமை விஞ்ஞானியாக (R&D - Chief Scientist) புதிய பொறுப்பை ஏற்கிறேன். எங்கள் இணை நிறுவனர் Shailesh Kumar Davey புதிய CEO வாக பணியாற்றுவார். எங்கள் இணை நிறுவனர் Tony Thomas, ZOHO USA -ஐ வழிநடத்துவார். Rajesh Ganesan எங்கள் மேனேஜ் எஞ்சின் பிரிவை வழிநடத்துவார், மணி வேம்பு Zoho.com பிரிவை வழிநடத்துவார்கள்.

எங்கள் நிறுவனத்தின் எதிர்காலம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சவாலை நாம் எவ்வளவு சிறப்பாகச் சமாளிக்கிறோம் என்பதைப் பொறுத்தது, மேலும் எனது புதிய பணியை ஆற்றலுடனும் வீரியத்துடனும் எதிர்நோக்குகிறேன். தொழில்நுட்பப் பணிகளில் மீண்டும் கைகோர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தனது X (twitter) தள பதிவில் தெரிவித்துள்ளார்.

SCROLL TO NEXT ARTICLE