Today Gold rate: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.60,760! #GoldRate #goldprice #silerRate

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 85 உயர்ந்து ரூ.7,595-க்கும் , ஒரு சவரன் ரூ.60,760 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று (ஜன.,28) தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.60,080 க்கு விற்பனை செய்யப்பட்டது.
அனால் இன்று (ஜன.,29) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7,595-க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி இன்று ஒரு கிராம் 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த 7 நாட்களின் தங்கம் விலை கடந்து வந்த பாதையை காணலாம்;
Jan 28, 2025 7,510 (-30)
Jan 27, 2025 ₹7,540 (-15)
Jan 22, 2025 ₹7,525 (+75)
Jan 21, 2025 ₹7,450 (0)
Tags:
#today gold rate #gold price #1 gram gold rate today #916 gold rate today 1 gram #gold price calculator