Valentine's Day: தொடங்கியது காதலர் தினம் கொண்டாட்டம். #ValentinesDay #Loversday

"கொடியேற்றத்துடன் தொடங்கி மஞ்சள் நீராட்டுடன் முடியும் கோவில் திருவிழாக்களை போல", ரோஜா தினத்துடன் தொடங்கி காதலர் தினத்துடன் நிறைவடையும் இந்த ஒரு வார கால கொண்டாட்டமே காதலர் தின வாரம் ஆகும். இந்த கொண்டாட்டத்தின் கடைசி நாள் காதலர் தினம் என்பதால் இது காதலர் தினம் என்று அறியப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் (பிப்ரவரி 7) ரோஜா தினத்துடன் (Rose Day) காதலர் தின வார கொண்டாட்டம் இனிதே தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே. அனால் இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே காதலர்களின் கொண்டாட்டங்கள் தொடங்கி விடும் என்பதும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு என்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. அதை தெரிந்து கொள்வோம் வாங்க !!!
காதலர் தின வாரம் 2025 (7 days of the Valentine's Week):
February 7 - Rose Day
February 8 - Propose Day
February 9 - Chocolate Day
February 10 - Teddy Day
February 11 - Promise Day
February 12 - Hug Day
February 13 - Kiss Day
February 14 - Valentine's Day
இனி ஒவ்வொரு நாளுக்குமான சிறப்பை தெரிந்து கொள்வோமா ?
February 7 - Rose Day (ரோஜா தினம்):
காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஜா தினம். இது அடுத்து வரும் 7 நாட்களுக்கான அச்சாரமாக அமைவது. நம் அன்புக்குரியவர்களுக்கு நமது குறிப்பை ரோஜாக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் உணர்த்தும் முதல் முயற்சி. அவர்களின் எதிர்வினையை பொறுத்து அடுத்தடுத்த நாட்களின் போக்கை தீர்மானித்து கொள்ளலாம்.
பொதுவாக, சிவப்பு ரோஜா என்பது காதலை சொல்ல பயன்படுத்தப்படும் குறியீடாக பார்க்கப்படுகிறது.
February 8 - Propose Day (முன்மொழிவு தினம்):
ரோஜா பரிமாற்ற தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்வினையை பொறுத்து, அடுத்த கட்ட நகர்வே இந்த தினம். உங்கள் இதயத்தின் உண்மையைப் பேசுவதற்கான நாள். உங்கள் உணர்வுகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவிக்கும் நாள் இது. இந்த முன்மொழிவு தினம் உங்களின் தைரியத்தையும் நேர்மையையும் அன்புக்குரியவர்களுக்கு எடுத்துரைக்கும்.
February 9 - Chocolate Day (சாக்லேட் தினம்):
முன்மொழிவு தின முடிவின் அடிப்படையில் அடுத்த நாளான சாக்லேட் தினத்தன்று, சாக்லேட்டுகளைப் பரிசளிப்பது என்பது "நான் உன்னை பார்த்துகொள்வேன்" அல்லது "நான் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று உணர்த்துவதற்கான வழியாக பார்க்கப்படுகிறது.
February 10 - Teddy Day (டெடி டே):
காதலர் தின வாரத்தின் நான்காவது நாளான இன்று டெடி பியரை பரிசாக வழங்குவதன் மூலம் உங்கள் அன்பு, பாசம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது கொண்டாடப்படுகிறது.
February 11 - Promise Day (வாக்குறுதி தினம்):
காதலர் தின வாரத்தில் மிகவும் அர்த்தமுள்ள நாட்களில் ஒன்றாகும். அன்புக்குரியவர்களுக்கு உங்கள் வாக்குறுதிகளை வழங்குவதற்கும், உறவுகளை வலுப்படுத்துவதற்கும், உறுதிமொழிகளை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் இந்த நாள் அர்பணிக்கப்பட்டுள்ளது.
February 12 - Hug Day (அரவணைப்பு நாள்)
அரவணைப்பு என்பது அன்பு, கவனிப்பு மற்றும் ஆதரவை வெளிப்படுத்தும், உறவுகளை வளர்த்து அன்புக்குரியவர்களிடையே பிணைப்புகளை ஆழப்படுத்தும் ஒரு உலகளாவிய மொழியாகும்.
வாக்குறுதி தினம் உங்கள் மீது ஏற்படுத்திய நம்பிக்கையின் அடையாளமாக, உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை உடல் ரீதியான தொடுதலுக்கு அனுமதிப்பதே இந்த அரவணைப்பு நாள் ஆகும். இந்த ஒற்றை அரவணைப்பில் மூலம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு உறுதியான பிணைப்பை ஏற்படுத்துகிறது.
February 13 - Kiss Day (முத்த தினம்):
காதலர் தினத்திற்கு முந்தைய ஒரு சிறப்பான நாள் இது. அன்புக்குரியவர்களிடையே பாசத்தை வெளிப்படுத்தவும், நினைவுகளை உருவாக்கவும், தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும், தங்கள் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் நாளாக இந்த முத்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு எளிய மற்றும் அன்பான சிறிய முத்தத்தின் மூலம் அன்பையும் உணர்ச்சி ரீதியான தொடர்பையும் வெளிப்படுத்துகிறோம்.
"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று" - என்ற தமிழ் சினிமாவில் வரும் ஒற்றை வரி போதும், முத்தத்தின் சிறப்பை சொல்ல!!!.
February 14 - Valentine's Day (காதலர் தினம்):
காதலர் தின வாரத்தின் உச்சகட்ட கொண்டாட்டத்தின் நாளே இந்த காதலர் தினம். "நான் உன்னை காதலிக்கிறேன்" / "I LOVE YOU" என்ற ஒற்றை தாரக மந்திரத்தின் மூலம் நம்முடைய அன்புக்குரியவர்களுக்கு நம் காதலை வெளிப்படையாக அறிவிக்கும் நாளையே காதலர் தினம் என்று கொண்டாடுகிறோம். இதன் இருவரும் வெளியுலகத்திற்கு தங்களை காதலர்களாக வெளிப்படையாக அறிவித்துக்கொள்கின்றனர்.
அவ்வாறு அறிவிக்கப்படும் காதல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வாழ்வில் ஒன்றிணைவதில் இருக்கிறது இந்த நாளின் உண்மையான வெற்றி.
ஆதலால் காதல் செய்வீர் !!!.
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!
#ValentinesDay. #LoveIsInTheAir. #RomanticMoments. #SpreadLove.
Tags:
#Valentines Day #காதலர் தினம் #february 14 #Valentine day Week #Rose Day