விஜய் சேதுபதி (Vijay sethupathi) மகனின் ‘பீனிக்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி. இவர் ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ போன்ற சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ்’ திரைப்படம் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம்.சி.எஸ். இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப்படம் ஆக்ஷன் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான இந்தப் படத்தின் இரண்டாவது பாடல், ‘இந்தா வாங்கிக்கோ’ மிகுந்த வரவேற்பைப் பெட்ரா நிலையில் இந்தப் படம் ஜூலை 4 ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Tags:
#phoenix movie #tamil cinema #vijay sethupathi son #பீனிக்ஸ் சினிமா #தமிழ் சினிமா