• 12:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர்

79th-independence-day-celebrations-prime-minister-hoists-the-national-flag-at-the-red-fort
Latest News

புதுடெல்லி: இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (15-08-2025) டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று விமரிசையாக கொண்​டாடப்பட உள்​ளது. இதற்​காக நாட்டின் 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு தயார் நிலையில் உள்ளன. தலைநகர் டெல்​லி​யில் உள்ள செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்​திர மோடி 12-வது முறை​யாக தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்​ளார்.

செங்​கோட்​டைக்கு வரும் பிரதமர் மோடியை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், இணை அமைச்​சர் சஞ்​சய் சேத், செய​லா​ளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்​பார்​கள். பின்பு தேசிய கோடி ஏற்றும் பிரதமர் ராணுவம், கடற்​படை, விமானப் படை மற்​றும் டெல்லி காவல் துறையை சேர்ந்த வீரர்​களின் சிறப்பு அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றுக் கொள்​வார்.

அடுத்து பிரதமரின் நாட்டுமக்களுக்கான உரை இடம்பெறும். இதில் நம்முடைய பொருளாதார வளர்ச்சி, அடுத்த குறிக்கோள்கள், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாக்., ராணுவ மோதல் விவகாரம், டிரம்ப்பின் வரிவிதிப்பு, வெளியுறவுக் கொள்கை, விண்வெளியில் சாதனை உள்ளிட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிய பிரதமரின் கருத்துக்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரதமா் மோடி, வளா்ந்த இந்தியா என்ற இலக்கை தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதுபற்றிய முக்கியத்துவமும் இன்றைய சுதந்திர தின உரையில் இடம்பெறும்.

சுதந்​திர தின விழா அழைப்​பிதழில் ஆபரேஷன் சிந்​தூரின் சின்​னம் பொறிக்​கப்​பட்டு இருக்கும் நிலையில் ஆபரேஷன் சிந்​தூரை பறைசாற்றும் விதமாக செங்​கோட்டை வளாகத்​தில் சிறப்பு மலர் அலங்​காரமும் செய்​யப்பட்டுள்ளது. 21 குண்​டு​கள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடியேற்​றும்​போது ஹெலி​காப்​டர்​கள் மூலம் மலர்​கள் தூவப்​படும்.

இந்த வரலாற்று முக்கிய விழாவை முன்னிட்டு செங்​கோட்டை வளாகத்​தில் 3 அடுக்கு பாது​காப்பு செய்​யப்​பட்டு உள்ளது. சுமார் 11,000-க்​கும் மேற்​பட்ட பாது​காப்பு படை வீரர்​கள் காவல், ரோந்து பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ட்ரோன்​களை வீழ்த்​தும் தடுப்பு கவசங்​கள், வெடிபொருட்கள் கண்காணிப்பு கருவிகள், அதிநவீன சிசிடிவி கேம​ராக்​கள் உள்​ளிட்​டவை மூலம் செங்கோட்டை மற்றும் சுற்று பகுதிகள் கண்காணிப்பில் உள்​ளன.

மேலும் நாடு முழு​வதும் இருந்து 85 பஞ்​சா​யத்து தலை​வர்​கள், பாது​காப்​புப் படை, விளை​யாட்​டு, தன்​னார்வ தொண்டு ஊழியர்​கள் உட்பட 5,000 சிறப்பு விருந்​தினர்​கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தாக்கல் வெளியாகியுள்ளது.

இந்த 79-வது சுதந்திர தின நன்னாளில் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூர்வோம். பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்!!!

வந்தே பாரதம்... பாரத் மாதகி ஜே... ஜெய்ஹிந்த்...

SCROLL TO NEXT ARTICLE