‘பிச்சைக்காரன் 3’: விஜய் ஆண்டனி சொன்ன அப்டேட் !!!

27 Jun, 2025 06:25 AM
pichaikkaran-3-update-from-vijay-antony

விஜய் ஆண்டனியின் நடிப்பில் லியோ ஜான் பால் இயக்கியுள்ள ‘மார்கன்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டியில், ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெற்றிப்படமாக அமைந்த ‘பிச்சைக்காரன்’ படத்தினை அதன் 2-ம் பாகத்தினை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்து, இயக்கி நாயகனாகவும் நடித்தார். அப்படமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘பிச்சைக்காரன் 3’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகம் நிலவும் நிலையில் அதுபற்றி விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘மார்கன்’ விளம்பரப்படுத்தும் பேட்டியில் ‘பிச்சைக்காரன் 3’ பற்றி விஜய் ஆண்டனி “‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு பிச்சைக்காரன் 3 வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:

#பிச்சைக்காரன் 3 #Pichaikkaran 3 #Pichaikkaran 3 update #vijay antony #margan

Trending now

We @ Social Media