இன்றைய முக்கிய செய்திகள் – 23 June 2025

23 Jun, 2025 08:03 PM
todays-top-news-in-tamil-23-june-2025

தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்:
ஆம் ஆத்மி 2, பாஜக, காங்., டிஎம்சி தலா 1 தொகுதிகளில் வெற்றி. நிலம்பூரில் காங்கிரஸ் வெற்றி; குஜராத், பஞ்சாபில் ஆம் ஆத்மி தலா ஒரு இடத்தை வென்றது; வங்காளத்தின் காளிகஞ்சை திரிணாமுல் கைப்பற்றியது; குஜராத்தில் காடியை பாஜக தக்க வைத்துக் கொண்டது.

ஈரான் - இஸ்ரேல் போர் இரண்டாவது வாரமாக தீவிரம்:
- ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியுள்ளதாகவும், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அளித்துள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

- ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

ஹெச்.ராஜா ஆஜராக உத்தரவு
மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உருவானது புதிய கூட்டணி: சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்:
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் அருண்குமார்.

ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு!
ஈரான் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து அதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது. அதன்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 49% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 78.93 டாலராகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 2.56% உயர்ந்து 75.73 டாலராக இருந்தது.

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த தண்ணீர் + மஞ்சள் ரீல்ஸ் பதிவுகள்:
இருண்ட இடத்தில் செல்போன் டார்ச்சினை ஆன் செய்து வைத்துக்கொண்டு, எதிரே தண்ணீர் நிரம்பிய கண்ணாடி டம்ளரில் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளை போடுகிறார்கள். அப்போது அது வித்தியாசமான ஜொலிக்கும் நிறத்தை கொடுக்கிறது. இதன் பின்னணியில் ஷாரூக் - தீபிகாவின் ‘ஓம் ஷாந்தி ஓம்’ பாடல் இசை இதமானதாக இருக்கிறது. இதை குழந்தைகள் வியப்போடு செய்யும் பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

தமிழகத்தில் 55 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்:
9 கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

போதைப்பொருள் வழக்கு: பிரபல தமிழ் நடிகர் கைது:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை - நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ள நிகழ்வு திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மியான்மரில் நிலநடுக்கம்:
மியான்மர் நாட்டில் அதிகாலை 5.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:

#Tamil news live updates #இன்றைய செய்திகள் #June 23 Tamil news #Daily Tamil news #Tamil news updates

Trending now

We @ Social Media