ஜூலை 2025 தமிழ் ராசி பலன்கள்

30 Jun, 2025 07:46 PM
july-2025-tamil-rasi-palangal-monthly-moon-sign-horoscope

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

ராசிநாதன் செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் துணிச்சலான சில முடிவுகளை எடுக்க வைப்பார். மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். ராசிநாதன் செவ்வாய் உங்களுக்கு நன்மைகளை அள்ளித் தரும் மாதமாக இந்த மாதம் மைய இருக்கிறது.

திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். மேலும் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஒரு சுமூகமான நிலை ஏற்படும். தடைபட்ட பணவரத்து கைக்கு வந்து சேரும் யோகம் உள்ளது.

எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண முயற்சிகள் கைகூடும். உல்லாச பயணம் செல்லும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாள் இருந்த குழப்பம் நீங்கி சுமுக தீர்வு உண்டாகும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

பிள்ளைகள் பற்றிய மனக் கவலை நீங்கும். தந்தை வழியில் வந்த பிரச்சனைகள் வந்த வழியே செல்லும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை, கல்வி தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த லாபங்கள் கலைத் துறையினருக்கு கிடைக்கும்.

--------------

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்)

வீடு, மனை, நிலம், வாகனம் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி செய்வதால் பல நல்ல அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாள் தடைபட்ட பணம் கைக்கு கிடைக்கும். தொழில் ஸ்தானம் மிக பலமாக இருப்பதால் தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம்.

எதிலும் தயக்கமோ, பயமோ இன்றி எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது கூடுதல் நலம். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம், தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரதில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பதவி உயர்வு தாமதப்படலாம், எனவே உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று பொறுமையை கையாள்வது நலம்.

வெளிநாடு திட்டம் இருந்தால் கவனதுடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகி நீங்கும். கடன் வாங்கல், கொடுப்பது போன்றவற்றில் மிகவும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரித்து வேலைப்பளு கூடும். பெண்கள் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.

--------------

மிதுனம்: (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

ராசிநாதன் புதன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஆட்சியாளராக வருகிறார். பொருளாதார நிலை மேம்படும். தொழில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். பண விரயமும் காரியத் தாமதமும் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனம் தேவை. எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் உங்கள் சாமர்த்திய தன்மையால் வெற்றி வந்து உங்களையே சேரும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், கொண்டாட்டமும் நடைபெறும். உறவினர்களுடன் சுமூக நிலை காணப்படும். வெளியூர்/வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். வசதிகள் பெருகும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சலுகைகளை பெற சற்றே அலைய வேண்டி இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கும் யோகம் உள்ளது. கலைஞர்கள் நல்ல புகழும், செல்வமும் கிடைக்கப் பெறுவர். வியாபாரிகள் வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ள, முன்னேற்றப் பாதை தேடி வரும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் தேவை.

--------------

கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

புதன் இந்த மாதம் ராசியில் இருக்கிறார். மாத மத்தியில் சூரியன் வருகிறார். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதேவேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.

கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் வீட்டில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை சமாளிக்கலாம். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்து வாழ்க்கை வளம் பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும் அதே வேளையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் தோன்றும். உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்கும் முன்னர் பலமுறை யோசித்து செயல்படுவது நன்மை பயக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியுடன் சேர்த்து அலைச்சலும் இருக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பயனாக புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள் பிரதி பலனை எதிர்பார்க்காமல் உழைக்க உழைத்தால் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்கும்.

--------------

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

ராசிநாதன் சூரியன் அயன சயன போக விரைய ஸ்தானத்திற்கு மாத மத்தியில் வருகிறார். அதனால் தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு சஞ்சாரத்தாலும் தெய்வ அனுகூலத்தாலும் முன்னேற்றம் உண்டு.

வியாபாரம் தொடங்குவதற்கு முன் அந்த தொழிலில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களிடம் முடிந்தால் ஆலோசனை செய்வது நல்லது. அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும்.

உறவினர்கள் வகையில் தேவையில்லாத குழப்பங்களும் மனக் கசப்பும் வரலாம், கவனம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கூடி வரும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முயற்சி வெற்றி நிச்சயம். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் உறவுகளின் அன்பும் பாசமும் கிடைக்கும்.

--------------

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

இந்த மாதம் ராசிநாதனுடைய சஞ்சாரம் லாபம் மற்றும் தொழில் ஸ்தானத்தில் அமைந்திருக்கிறது. எனவே எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் திறமை கூடும். மதிப்பும் மரியாதையும் சுமாராக இருக்கும். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். புதிய வீடு/வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியடையும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். சிறு சிறு பிரச்சனை ஏற்படும்போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போனால் பெரிய பிரச்சனைகளிலிருந்து விலகியிருக்கலாம். தூரத்து உறவினரால் அனுகூலம் ஏற்படும்.

தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியில் செல்ல நேரிடலாம். சொந்த தொழில் செய்பவர்கள் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும்.

சக ஊழியர்களுடன் அனுசரனையாக நடந்து கொள்ளவும். உங்கள் வேலைப் பளு அதிகரிக்கும். அதற்கேட்ப வருமானத்தில் எந்த குறையும் வராது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பதவி கிடைப்பதில் இழுபறி ஏற்படலாம். குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் எடுக்க வேண்டும். போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உண்டு.

--------------

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்)

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு சஷ்டாஷ்டகத்தில் இருந்தாலும் ஆட்சியாக இருப்பதால் இதுவரை இருந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் மிகுந்த கவனம் அவசியம். உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தமான உபாதைகள் வரலாம், கவனம்.

புதிய வீடு/மனை யோகம் உண்டு, ஆனாலும் வாங்கும் போது கவனம் தேவை. பலமுறை பலரிடம் விசாரித்து வாங்கினால் நல்லது. பணப் புழக்கம் போதிய அளவு இருக்கும். சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படலாம். சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெற்று மகிழ்ச்சி கூடும். குழந்தை பாக்கியம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

தொழில் ஸ்தானம் வலுவாக உள்ளது. வியாபாரிகள் லாபம் அதிகரிக்கும். சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். வியாபார விரிவாக்கம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்து சேரும். சக நண்பர்களால் பிரச்சனைகள் வரலாம். அரசியல்வாதிகள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும்

--------------

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உங்களைப் பற்றிய தவறான புரிதலை உங்கள் வீட்டார் உணர்ந்து கொண்டு உங்களிடம் மிகுந்த அனுசரனையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தடைகளை வென்று சரித்திரம் படைப்பீர்கள்.

கணவன், மனைவியிடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள்.

உத்தியோகம் செய்பவர்களுக்கு கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். வருமானம் இரட்டிப்பாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரித்து லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்த தொந்தரவு நீங்கும்.

கலைத்துறையினருக்கு பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பாராத வெற்றி, பாராட்டுகளும் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக செய்வாய் செய்வோர் முன்னேற மிகுந்த முயற்சிகள் தேவை. விட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் விரும்பி வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.

பெண்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

--------------

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் மிக அனுகூலமாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உங்கள் மேல் இருந்த அவப்பெயர் அழிந்து செல்வாக்கு உயரும். மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடி வரும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.

குடும்ப பிரச்சனை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது அனைவருக்கும் நல்லது. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். வீட்டிற்கு வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

நண்பர்கள் இடையே நட்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து வந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து உங்களின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் மந்த நிலை மறைந்து முன்னேற்றம் கூடும். வேலைப் பளு கூடினாலும் வருமானம் எதிர்பார்த்த அளவு வருவதில் தாமதம் ஆகும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து வருமானம் கூடும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான மாதம் இது. நினைத்ததை நிறைவேற்றி கொள்ள வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.

--------------

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்)

உங்கள் ராசிநாதன் சனி அனுகூலமாகமாகவும், யோகாதிபதி சுக்கிரனும் மிக பலமாக இருப்பதால் சிக்கனம் தேவை. மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும் நொடிப் பொழுதில் மறைந்து விடும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல்கள், வேலைப்பளு இருந்தாலும் சுலபமாக எடுத்துக்கொண்டு வென்று காட்டுவீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

கலைத்துறையினருக்கு பொன்னான காலம். முயற்சி சிறிதெனினும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை மிகுந்த துணிவுடன் அணுகவும். புகழ், பாராட்டு கிடைக்கும் காலமிது.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் சிறிது முயற்சி எடுத்தாலே பெரிய வெற்றி காணலாம். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

--------------

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பொருளாதார நிலையும், வளமும், மகிழ்ச்சியும் மேன்மையடையும். பணப் புழக்கம் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். உங்கள் மதிப்பு மரியாதையும், செல்வாக்கும் பலமடங்கு விரிவடையும்.

தம்பதிகளிடையே அன்பு மேலோங்கினாலும் சிறு சிறு ஊடல்கள் இருக்கும். மனைவி வழி கருத்து வேறுபாடு மறையும். பிரிந்த குடும்பம் ஓற்றுமையாகும். சுபநிகழ்ச்சிகள் வாய்ப்பு உள்ளது.

உத்தியோகம் பார்ப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றால் உன்னத நிலையை அடையலாம். மேலதிகாரிகளின் முழு ஆதரவு, சக ஊழியர்களின் உதவி போன்றவை கிடைக்கும்.

வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள், நல்ல பலன்களைக் காணலாம். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை ஆரம்பிக்கலாம். தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் செயல்பாடுகளால் புகழ், பாராட்டு வந்து சேரும்.

அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் ஏராளமாக கிடைக்கும். பயன்படுத்திக்கொள்வது நல்லது. எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். சுக்கிரன் ஆட்சியில் இருப்பதால் மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்வார்கள்.

--------------

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இதுநாள் வரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் மறையும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பாதைகளை வகுப்பீர்கள். காரிய அனுகூலங்களும் உண்டு. நீண்ட நாட்களாக இருந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். செய்யும் முயற்சிகளில் வரும் தடைகளை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள்.

தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும் காலமிது. எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தொடர்ந்து கவனம் எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் உண்டு.

கலைத்துறையினருக்கு பணவரவு சீராக இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு போன்றவை தேடி வரும்.

அரசியல்வாதிகளுக்கு அண்டை அயலாருடன் மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியமாகும்.

Tags:

#ஜூலை 2025 தமிழ் ராசி பலன்கள் #July 2025 Tamil Rasi Palangal #தமிழ் ராசி பலன்கள் ஜூலை 2025 #Tamil Rasippalangal July 2025 #மாத ராசி பலன்

Trending now

We @ Social Media