தினம் ஒரு குறள்: கடவுள் வாழ்த்து - குறள் 3
03 Jan, 2025 12:48 PM

அதிகாரம் 1 / Chapter 1
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மு.வ விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
கலைஞர் விளக்கம்:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
Tags:
#Thirukkural in Tamil #Thirukkural quotes in Tamil #Thirukkural status in Tamil #கடவுள் வாழ்த்து அதிகாரம் #திருக்குறள்