• 11:30 am
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

Budget 2025: இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

budget-2025-all-party-consultative-meeting-to-be-held-today
Latest News

Budget 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில்,அதை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும், கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்தும் ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL TO NEXT ARTICLE