இன்று (ஜூலை 1, 2025) முதல் ரயில், பான் கார்டு, டிக்கெட் முன்பதிவில் வரப்போகும் மாற்றங்கள் என்ன?

what-are-the-changes-coming-in-train-pan-card-and-ticket-booking-starting-today-july-1-2025
Latest News

இன்று (ஜூலை 1, 2025) முதல் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு, ரயில் கட்டணம், ஆதார் - பான் இணைப்பு போன்றவற்றில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முக்கிய மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. ரயில் டிக்கெட் கட்டண உயர்வு: Train Ticket Fair

நாடு முழுவதும் இன்று (ஜூலை 1, செவ்வாய்க்கிழமை) முதல் பயணிகள் ரயில் சேவை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன் படி 500 கி.மீ க்கு மேலான நீண்ட தூர பயணங்களுக்காண கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* புறநகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதைய கட்டணமே தொடரும்.
* ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களில் எந்த மாற்றம் இல்லை.
* விரைவு ரயில்களில் 500 கி.மீ., வரை கட்டண உயர்வு கிடையாது. 501 முதல் 1,500 கி.மீ வரையிலான பயண தூரத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
* அதேபோல முதல் வகுப்பு 'ஏசி' பெட்டியில் 1 கி.மீ.,க்கு 5 காசு அதிகரிப்பு
* ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் இன்றி அந்த பயணசீட்டே செல்லுபடியாகும்.

2. பான் - ஆதார் இணைப்பு: (Aadhaar-PAN link)

இன்று (ஜூலை 1, செவ்வாய்க்கிழமை) முதல் புதிய பான் கார்டு (PAN Card) விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்க தவறினால், ஏற்கனவே உள்ள பான் எண் செயலிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

3. தட்கல் டிக்கெட் முன்பதிவு: IRCTC tatkal ticket booking

தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடக்கும் மோசடி தொடர்பாக ஏற்கனவே 2.5 கோடி போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நீக்கியது. அதன் தொடர்ச்சியாக தட்கல் டிக்கெட்களை பயனர்கள் எளிதாகப் பெறும் வகையில் ஆதார் அங்கீகார முறை அமுல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் எளிதாக தட்கல் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். மேலும் வரும் ஜூலை 15 முதல் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் இரண்டு காரணி அங்கீகாரம் (two-factor authentication) அவசியம். இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் கடவுச் சொல் அனுப்பப்பட்டு அங்கீகரிக்கப்படும்.

4. வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: (Tax e-Filing)

2025-26 - ம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆக இருந்த நிலையில் தற்போது இது செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலக்கெடு தணிக்கை அல்லாத வரி செலுத்துவோருக்கு (பெரும்பாலான சம்பளம் வாங்கும் தனிநபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள்) மட்டுமே பொருந்தும். மேலும் இறுதி வரி அல்லது சுய மதிப்பீட்டு வரி போன்ற நிலுவையில் உள்ள எந்தவொரு வரிகளையும் ஜூலை 31, 2025-க்கு முன்பே செலுத்த வேண்டும்.

5. கிரெடிட் கார்டு: Credit card

SBI உள்ளிட்ட முக்கிய வங்கிகள் தங்களின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு இதுநாள் வரை கொடுத்து வந்த விமான விபத்து காப்பீட்டு (accident insurance coverage) வசதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் மாத பில்களில் செலுத்தப்படும் குறைந்த பட்ச தொகையிலும் (Minimum Amount) மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேபோல HDFC வங்கியும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.

6. ஏடிஎம் பணவரித்தனை: (ATM withdraw)

ICICI வங்கி, ஏடிஎம் பணவரித்தனை சேவை கட்டண முறைகளில் சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி மாதம் தோறும் முதல் 5 பண பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் இல்லை என்றும் அதன் பின்னர் மேற்காள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.23 கட்டணம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் ஐசிஐசிஐ (ICICI) வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை, மெட்ரோ நகரங்களில் 3 முறையும், சிறிய நகரங்களில் 5 முறையும் இலவச பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு மேல் மேட்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 செலுத்த வேண்டும்.

SCROLL TO NEXT ARTICLE