• 07:30 am
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: தமிழகத்தில் வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள் #Bharat bandh

nationwide-strike-buses-operating-as-usual-in-tamil-nadu
Latest News

சென்னை; நாடு தழுவிய வேலைநிறுத்தம் (#Bharat bandh) காரணமாக தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

13 தொழிற்சங்கங்கள் சார்பில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய இன்று வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. தேசிய அளவில் நடைபெறும் இந்த போராட்டம் பல்வேறு மாநிலங்களில் காலை முதலே நடைபெற்று வருகிறது.

இருந்தபோதிலும், தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்பு இல்லை. ஒரு சில தொழிற்சங்கங்கள் சார்பாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய வங்கிகளில் பணிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சில தனியார் பள்ளிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. ஆட்டோக்கள் ஓடவில்லை. சில பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.

SCROLL TO NEXT ARTICLE