சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது! - டிரம்ப் அதிரடி.

538-illegal-immigrants-arrested-trump-takes-action
Latest News

வாஷிங்டன்: சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் (78), அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றத்திலிருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் முக்கியமாக 'சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும் என்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அறிவித்தார். அதனை தொடர்ந்து மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் மேட்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு வந்த 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதுவரை சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு இவர்களில் நூற்றுக்கணக்கானோர் ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி நாடு கடத்தப்பட்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL TO NEXT ARTICLE