உலகையே வியக்க வைக்கப்போகும் 'இந்தியா AI உச்சி மாநாடு 2026' இன்று ஆரம்பம்!!!

the-india-ai-summit-2026-which-will-amaze-the-world-begins-today
Latest News

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் இந்தியா உலக நாடுகளுக்குத் தலைமை தாங்கும் தருணம் நெருங்கிவிட்டது. இன்று (பிப்ரவரி 16, 2026) முதல் பிப்.20 வரை உலகமே வியந்து பார்க்கும் வகையில் புதுடில்லியில் நடைபெறுகிறது "இந்தியா AI உச்சி மாநாடு" (India AI Impact Summit 2026).

உலகளாவிய தெற்கு (Global South) நாடுகளில் நடத்தப்படும் முதல் சர்வதேச AI மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக கருதப்படுவது,

1. மக்கள் (People): தொழில்நுட்பம் சாமானிய மக்களுக்கும்.
2. பூமி (Planet): சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத நிலையான தொழில்நுட்ப வளர்ச்சி.
3. முன்னேற்றம் (Progress): உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி.

இந்த மூன்று கொள்கைகளையும் செயல்படுத்த "7 சக்கரங்கள் (7 Chakras)" என்ற பெயரில் மனித வளம், பாதுகாப்பான AI, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற 7 முக்கியத் துறைகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களான சுந்தர் பிச்சை (Google CEO), சாம் ஆல்ட்மேன் (OpenAI CEO), ஜென்சன் ஹுவாங் (NVIDIA CEO), பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் மூலம் இந்தியா தனது சொந்த 'இந்தியா AI மிஷன்' (IndiaAI Mission) திட்டத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது. இதில் 22 இந்திய மொழிகளில் செயல்படக்கூடிய AI மாடல்கள் மற்றும் விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளில் AI-இன் நேரடிப் பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்படும்.

இந்தியா ஒரு தரவு (Data) மற்றும் திறமை மிகுந்த நாடாக மட்டும் இல்லாமல், இனி AI தொழில்நுட்பத்தைப் படைக்கும் வல்லரசாகவும் மாறும் என்பதை இந்த மாநாடு உறுதிப்படுத்தும். 'அனைவருக்கும் நலம், அனைவருக்கும் மகிழ்ச்சி' (Sarvajana Hitaya, Sarvajana Sukhaya) என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில் ஒரு புதிய மைல்கல்!

SCROLL TO NEXT ARTICLE