இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 01, 2026) @Topnewstamil #BREAKING #TAMILNEWS

today-march-01-2026-top-news-in-tamil-topnewstamil
Latest News
ஈரான் மீது தாக்குதல்:

ஈரான் தனது அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சோதனையை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து "தற்காப்புத் தாக்குதல்" நடத்தியுள்ளது. ஈரான் முக்கிய தலைவர் கமேனி தொடர்பான இடங்கள் உள்பட நகரின் பல முக்கிய நகரங்கள் மற்றும் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ அமைச்சர் மற்றும் 100க்கும் மேட்பட்ட குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பலியாகியுள்ளனர். சவூதி உள்பட பல நாடுகளில் வான்வழி போக்குவரத்து முற்றிலும் மூடல். அமெரிக்க ராணுவ தளங்களை நோக்கி ஈரான் பதில் தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் ஈரான் அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் போர் எதிரொலியால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 5200 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 25000 வரை அதிகரித்துள்ளது.

கனடா பிரதமர் வருகை:

கனடா பிரதமர் மார்க் கார்னி 4-நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மும்பை வந்தடைந்தார். இந்தியா - கனடா உறவில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்:

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் முறைப்படி திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

தேர்வு நேர மின்வெட்டு ரத்து:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படாது என மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு.

கூட்டணிப் பேச்சுவார்த்தை:

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள இந்திய முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்து.

பட்டாசு ஆலை வெடிவிபத்து:

ஆந்திர மாநிலம் காக்கி நாடா மாவட்டத்தில் வெட்லபாலம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

பிரதமர் மோடி தமிழக வருகை:

புதுவை மற்றும் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழிச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று இரவு 8:45 மணிக்கு சென்னை வந்தடைந்தார். இன்று காலை புதுவை செல்லும் பிரதமர் பின்பு 3மணிக்கு மதுரையில் NDA கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 4மணிக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு, மாலை 6மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

வீடியோ வடிவில் காண: https://youtube.com/shorts/JS6kgncSYgQ

SCROLL TO NEXT ARTICLE