ஈரான் போரின் தாக்கம்… இந்தியாவுக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்பு தெரியுமா? ஓர் அலசல்!!!

analysis-the-impact-of-the-iran-war-the-repercussions-for-india
Latest News

ஈரான் போரின் தாக்கம்… இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி கொள்வோம்.

கச்சா எண்ணெய் எரிவாயு விநியோகம்:
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்த நிலையில்,  ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டியிருப்பினும் இப்போது வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாதது சற்றே ஆறுதல்.

வீட்டு எரிவாயு சிலிண்டர் ₹60 ரூபாயும் வணிக சிலிண்டர் ₹115 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சிக்கலில் உள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஏற்றுமதியும் கடுமையாக பாதிப்பு:
4 லட்சம் டன் பாசுமதி அரிசி துறைமுகங்களில் தேங்கியுள்ளது. நாமக்கல்லில் மட்டும் 5 கோடி முட்டைகள் விற்க முடியாமல் தேங்கியுள்ளது. இதுபோக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியிலும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்திலும் சிக்கல்:
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், இந்தியப் பெருங்கடலில் ஈரானியப் போர்க் கப்பலைத் தாக்கியதன் விளைவாக வர்த்தகக் கப்பல்கள் செங்கடலுக்குப் பதிலாக மாற்று பாதைகளில் சுற்றிப் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள், காப்பீடு, சரக்கு கட்டணம் போன்றவை சுமார் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

வர்த்தக பாதிப்பு:
* பங்குச்சந்தைகள் முகுந்த சரிவை சந்தித்துள்ளன. இதனால் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களின் சுமார் ₹30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

* மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 92 ரூபாய் சரிந்துள்ளது.

* இந்தியாவின் சரக்கு ஏற்​றுமதி ₹75,000 கோடி முதல் ₹92,000 கோடி வரை பாதிக்கலாம் என ஏற்​றும​தி​யாளர் சங்கங்கள் கணித்துள்ளன.

எந்த ஒரு நாட்டில் போர் நடந்தாலும்… அதன் பாதிப்பு அந்த நாட்டிற்கு மட்டுமல்ல அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதற்கு இந்த போரே சாட்சி.

SCROLL TO NEXT ARTICLE