மார்ச் 16, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
# நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை:
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத் தவறினால், அந்த அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
# 2025-26 நிதியாண்டில் GDP வளர்ச்சி: RBI !
இந்த நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.2% அளவுக்கு உயரும் என RBI கணித்துள்ளது. இது உலகின் பிற வளர்ந்த நாடுகளை விட மிக வேகமான வளர்ச்சியாகும். இதற்கிடையே மும்பை பங்குச்சந்தை குறியீடான SENSEX, இன்று வர்த்தகத்தின் போது 82,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
# கேரளா தேர்தல்: பினராயி விஜயன் போட்டி!
கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
# தேர்தல் நடத்தை விதிகள் அமல்:
தமிழகத்தில் ஏப்-23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாநிலம் முழுவதும் பறக்கும் படை வாகனங்கள் சோதனையை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நாகை, கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்ட எஸ்பிக்களை மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
# வேட்பு மனு தாக்கல்: 5 நாட்கள் மட்டுமே!
தமிழ்நாட்டில் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் காலக்கெடுவில் அரசு விடுமுறை நாட்கள் இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய 5 நாட்கள் மட்டுமே வாய்ப்பு இருக்கும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
# நாளை ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
# ஆஸ்கரை அள்ளிய 'One Battle After Another'!
இந்த வருடத்தின் 'சிறந்த படம்' என்ற விருதை One Battle After Another தட்டிச் சென்றுள்ளது. மேலும் இந்த படம் சிறந்த இயக்குனர், திரைக்கதை, துணை நடிகர், படத்தொகுப்பு, காஸ்டிங் உள்ளிட்ட மொத்தம் 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.