இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 20, 2026) @Topnewstamil #BREAKING #TAMILNEWS

today-march-20-2026-top-news-in-tamil-topnewstamil
Latest News

மார்ச் 20, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அறிவிப்பு:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், விலை உயர்வுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. எனினும், சாதாரண பெட்ரோலின் விலையில் மாற்றம் எதையும் அது செய்யவில்லை.

மேற்கு வங்க தேர்தல்: 10 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மம்தா!

294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மம்தா பானர்ஜி வீடுதேடி மருத்துவம், பெண்களுக்கு மாதம் ரூ1,500, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 10 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

NDA தொகுதிப் பங்கீடு: தினகரனும், அன்புமணியும் டெல்லி பயணம்!

டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷாவை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று சந்​தித்து தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தொகுதி பங்கீடு குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார். அதைத் தொடர்ந்​து, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோ​ரும் இன்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 17, அமமுக 9, தாமாக 3 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

புதுச்சேரி முடிவுக்கு வரும் கூட்டணி இழுபறி: ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்!

புதுச்சேரியில் வரும் 9 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

சேலத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு!

சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதியதில் அதில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் டிப்பர் வேனில் இருந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் உயிர்ப்பலி 8-ஆக அதிகரித்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

ஏப்.17-க்குள் பள்ளி தேர்வுகள் நிறைவு? பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL TO NEXT ARTICLE